Articles

Home | Articles

தமிழில் முழு மஹாபாரதம்

தமிழில் முழு மஹாபாரதம், இது சாதாரண முயற்சி அல்ல, குரு வேத வியாசர் அருள் இருப்பதால்தான் குரு செ.அருட்செல்வப் பேரரசன் அவர்களால் இப்பெரும் நற்பணி துவங்க முடிந்தது, இதுவரை  நேரடியாக சமஸ்கிருதத்திலிருந்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரத்திற்க்கும்  மேற்பட்ட  ஸ்லோகங்கள் கொண்ட முழு மஹாபாரதம் (பதினெட்டு பர்வங்களும்)  நான் அறிந்தவரை இரு வேறு ஆசிரியர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது, அவை  மஹாபாரத கும்பகோணப்பதிப்பு, குரு. ம. வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டது, மற்றொன்று 18ஆம் நூற்றாண்டின் நல்லபிள்ளை பாரதம். இவை இரண்டும் புத்தகமாகவே கிடைக்கின்றன, தற்போது மூன்றாவதாக குரு செ.அருட்செல்வப் பேரரசனின் இப்பெரும் நன்முயற்சியால் உலக தமிழ் மக்கள் யாவரும் படித்து பயன் பெறும் வகையில் முதன் முறையாக இலவசமாக தமிழில் முழு மஹாபாரதத்தை அவா் இணையதளத்தில் முதல் மூன்று பர்வங்களை வெளியிட்டிருக்கிறார். ஆராய்ந்து படித்து பயன் பெறுவோம் Link : http://mahabharatham.arasan.info/

வில்லிபுத்துராரை நான் இங்கு குறிப்பிடாததற்கு காரணம் அவர் 10 பர்வங்களுடன் மொழிபெயர்ப்பை நிறுத்தியதுதான். மேலும் பலர் மஹாபாரதத்தை வெறும் கதை போல் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை இவைகள் சத்தான பழத்தின் சாறு நீக்கபட்ட சக்கைகள் ஆகும். குரு வேத வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் ஒரு எழுத்தை கூட விட்டுவிட்டு மொழிபெயர்க்கும் உரிமை மனிதர்களாகிய நமக்கு இல்லை, குரு வேத வியாசர் மஹாபாரதத்தை நான்கு வேதத்தின் குறுகிய வடிவமே என்கிறார், அதை சுருக்கி கூறும் அதிகாரம் நமக்கு இல்லை, தமிழில் முழு மஹாபாரதம் புத்தகமாக தராவிட்டாலும் தார்பரிய விளக்கத்தோடு முழு மஹாபாரத சொற்பொழிவு நடத்தும் மகான்களும் உண்டு, குறிப்பாக குரு ப்ரம்ஹஸ்ரீ v. கோபால்ஜீ அவர்கள், குரு வேலுக்குடி கிருக்ஷ்னன் அவர்கள், இச்சான்றோர்களால் முழு மஹாபாரதமும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக கிடைத்தால் என்றும் நம் தமிழ் சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்கும். தற்பொழுது கிடைக்கும் மஹாபாரத புத்தகங்களி்ல் என் சிற்றறிவுக்கு எட்டியவரை குரு சோ.ராமசாமி அவர்கள் எழுதிய மஹாபாரதமே சிறந்ததாக தெரிகிறது, சுருக்கமான விளக்கவுரை என்றாலும் கருத்துக்களில் மாற்றமில்லாமல் உள்ளது உள்ளபடி சிறப்பாக தந்திருக்கிறார்.

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now