Articles

Home | Articles

சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கு குறைந்தது நல்லது, ஏன்?

சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கு குறைந்தது நல்லது, ஏன்?

சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குறியது என்று திசை திருப்பப்பட்ட பின்னாலேயே அதை கற்பவர் எண்ணிக்கை குறைந்து போனது, சமஸ்கிருதத்தை தர்மமாக பார்க்கப்பட்ட போது அது செழித்து இருந்தது அது ஒரு ஜாதியின் அடையாளமாகப் ஆக்கப்பட்டதும், அப் பொக்கிஷத்தை திறக்க சாவிகள் குறைந்து போனது, ஓர் ஆதரவான நிலை சாவிகள் தான் குறைந்ததே தவிர பொக்கிஷம் அப்படியே இருக்கிறது.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது சமஸ்கிருதத்தை பாதுகாக்கும் என்பதை எள் அளவும் அதை ஏற்று கொள்ள முடியாது . சமஸ்கிருதம் வேதத்தை பாதுகாப்பதற்கே தோன்றிய மொழி. தமிழும் சமஸ்கிருதமும் வெறும் மொழி அல்ல, மற்ற மொழிகளில் இலக்கணம் என்பது மொழியை சரியாகப் எழுதுவதற்காக, மற்றும் புரிந்து கொள்ள உபயோகிக்கப்படுகிறது, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கணம் என்பது மொழியோடு, இயற்கை, வாழ்க்கை முறை, வேதம் மற்றும் அனைத்து தர்ம சாஸ்திரங்களை உணர்ந்து கொள்ள உதவுகிறது.

சமஸ்கிருதம் சில இடங்களில் பேச்சு வழக்கில் வந்ததால்தான் பல இடைசொறுகள்கள் வருவதற்கு காரணம் ஆனது . ஆதியில் சமஸ்கிருதம் பேசும் வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் வந்த எந்த மொழியும் ஒலி மாற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது . இதுவே மொழிகளின் பொதுவான விதி. யோசித்து பார்க்க வேண்டும் . சிறு ஒலி மாறினாலும் சமஸ்கிருதத்தில் பல அர்த்தங்கள் மாறிவிடும்.

ஒரு வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சிறு ஒலி மாற்றத்தால் பற்பல அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள் பல உண்டு. சமஸ்கிருதத்தை வேதம் மற்றும் இதிகாசங்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதுதான் வேதத்தின் மூல கரு மாறாமல் பாதுகாப்பதற்கான வழி. சென்னையில் மீனாட்சி கல்லூரியில் நடந்த சமஸ்கிருத விழா ஒன்றில் சமஸ்கிருத நிபுணர் ஒருவர், நாம் அன்றாடம் சமஸ்கிருதத்தில் பேசி பழக வேண்டும் என்று அந்தப் பயிலரங்கத்தில் பேசினார், கற்பனை செய்து பாருங்கள். பேச்சு வழக்கில் தமிழ் மொழியில் நாம் எத்தனை வார்த்தைகளை தவறாக உபயோகிக்குறோம்.

தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் தர்மத்தின் அடிப்படையில் உருவான மொழி . சிறு உதாரணம் "நாசமற்று போனவனே (நாசமத்து போனவனே) " என்கின்ற தமிழ் வார்த்தை ஒன்று உண்டு . உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஓர் அபூர்வமான வார்த்தை. ஆதி தமிழர்கள் தங்கள் குழந்தைகளை சிறுசிறு தவறுகளுக்காக "திட்டுவதற்கு " உபயோகித்த வார்த்தை. உலகிலேயே திட்டுவதற்கு "வாழ்த்துகின்ற " ஓர் வார்த்தையை உபயோகிக்கும் ஒரே மொழி தமிழ்தான். இந்த ஒரு வார்த்தை மற்றும் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டியவரை மேலும் சில வார்த்தைகளை கண்டறிந்தேன். மேற்கூறிய "நாசமற்று போனவனே " என்கின்ற வார்த்தையை நம் இப்பொழுது எப்படி உபயோகிக்கிறோம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதைபோல் மற்றொரு வார்த்தை "எக்கேடும் கெடும் போடா" . இந்த தொன்மையான வார்த்தை "வரம்" ஆகும், நாம் அதை "சாபமிட" உபயோகிக்கிறோம்.

ஒரு தவறான வார்த்தையை மிக சகஜமாக நாம் உபயோகித்து கொண்டிருக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு . அதில் ஒன்று "பால் மாறாதே " என்பது ஒரு ஆணையோ பெண்ணையோ மிக மோசமாக திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தை. அதை நாம் எப்படி உபயோகிக்குறோம் என்பது உங்களுக்கு தெரியும் . நான் இருகரம் கூப்பி கேட்டு கொள்வது என்னவென்றால் தெய்வ மொழியாம் சமஸ்கிருதத்தை படித்து எழுதி ஆராய்ச்சி செய்து ஒலி மாறாமல் காப்போம்.

"தெய்வமொழியாம் சமஸ்கிருதம் வேதத்தைபாதுகாக்க மட்டுமே தோன்றிய மொழி ,செம்மொழியாம் தமிழ்மொழி தர்மத்தோடு கூடிய பேச்சு வழக்குமொழி ,தமிழை ஒரு கண்ணாகவும் சமஸ்கிருதத்தை மறு
கண்ணாகவும் போற்றி பாதுகாப்போம்
".

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now