Articles

Home | Articles

மாதவிடாய் பற்றிய சில மூடநம்பிக்கைகள்

உலகத்திற்க்கு நாகரிகத்தை கற்று தந்த நமது இந்த தமிழ் சமுகத்தில் நடக்கும் மோசமான மூடநம்பிக்கைகளுள் இது ஆபத்தானது. இதை திறந்த இதயத்தோடு புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள். நம் முன்னோற்கள் சொன்னதுதான் , நாம்  எதுவும்  புதிதாக  சொல்லதேவையில்லை.

"மாதவிடாய், நாட்களில் பெண்களை ஒரு ராணியை பார்த்து கொள்வது போல் பணிவிடை செய்யவேண்டும் " என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது, இந்த மூன்று  நாட்கள் ஒய்வு, மீதம் இருக்கும் 27 நாட்கள் அவள் உழைப்புக்கு பலம் சேர்க்கிறது. அப்பரிபூர்ன ஒய்வால் மாதவிடாய்யும் காலம் தவறாமல் வருகிறது, இது பெண்களுக்கு மிக முக்கியமான  ஆரோக்கியம், தனியக இருக்க வேண்டும், எதையும் செய்யகூடாது, என்பதேல்லாம் ஆரோக்கியம் மற்றும் முழு ஓய்வுக்காகத்தான், தீட்டு என்று அல்ல, இதை சரியாகய கடைபிடிக்க மறுத்த சிறுவயதினர் மற்றும் சில சமுதயத்திற்க்காக உருவக்கபட்ட சம்பரதாயங்கள். கொடூர மதி படைத்த சிலரால் சிதைக்கபட்டு சில மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிட்டது, சிறுமதி படைத்தவர்களால் இன்று  பின்பற்றபடுகிறது.

நம் ஒவ்வொரு சம்பரதாயத்திற்க்கும் பின்னால் ஒர் அறிவியல் உண்மைகள் இருந்தாலும் நம் முன்னோற்கள் பெரும்பாலும் அதை விளக்கி கொண்டிருப்பதில்லை. அது அறிவியல் என்ற வார்த்தை தனியாக இல்லத காலம் மேலும் முத்தவர்கள் இளையவர்களுக்கு நல்லதையே சொல்வார்கள் என்று முழுமையாக நம்பிய சமுதாயம் அது.

நாம் இருக்கும் சமுதாயமோ தொலைகாட்சியில்  வரும் விளம்பரம் " அந்த மூன்று நாட்கள் சும்மவே இருக்க கூடாது அது  மூடநம்பிக்கை "  என்று தேவையே இல்லாமல் எகிரி குதித்து, "இது என் சுதந்திரம் இந்த நிலமை மாறணும்  " என்று மாதவிடாய் இல்லாத  சமயத்தில் காசுக்க ஒரு பெண் நடித்த  விளம்பரத்தை நாகரிகமாக ஏற்க்கும்  சமுதாயம், இந்த உலகத்தில் ஒரு பெண் சொல்லட்டும், மாதவிடாய் சமயத்தில் சுதந்திரம் என்று எகிரி,  எகிரி குதிப்பது நல்லாயிருக்கும் என்று, இது போண்ற விளம்பரங்களால் இக்கால இளம் பெண்களின் மனநிலை பாதிக்கபடுகிறது., தொலைகாட்சியில் வரும் பெண் இப்படி குதிக்கிறாள் நம் உடம்பு மாதவிடாய் நாட்களில் அடித்து போட்டது போல்  இருக்கிறதே , நம் உடம்புக்கு ஏதோ ஆகிவிட்டது என்று குழம்புகிறார்கள், பிறரிடம் கேட்பதற்கு தயங்குகிறர்கள். ஏன் என்றால் ஆண், பெண் உடலுறவு பற்றி பேசுவது அநாகரிகமாக என்னும் நாகரீக  ஏமாளிகள் நிறைந்த சமுதாயம் இது.

மஞ்சள்நீர்  ஊற்றும் சடங்கு எல்லாம் இப்ப அநாகரிகமாக படுகிரது,
ஒரு இளம் பெண்னை விவரம் அடைந்த பெண்ணாக குடும்பத்தினரிடையே அறிமுகம் செய்து, அப்பெண்ணை விவரம் அறிய  வைப்பார்கள், சபையில் செய்யும் முதல் மரியாதை அது தான், இதனால் இளம் பெண் தன்  பொறுப்பு, பெருமை,  உரிமை அனைத்தையும் உணர்கிறாள், தன் பால் சார்ந்த விவரங்களை சங்கோஜம் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்கிறாள், முன்னோற்களின் இது போன்ற இலைமறை காயாக சொல்லிய  பாலியல் கல்வி முறையே சரியான பலன் அளிக்கும்.

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now