Articles

Home | Articles

மஹாபாரதத்தில் பிறப்பால் ஒருவன் பிராமனனாகவோ, சத்ரியனாகவோ, வைசியனாகவோ ஆகிவிட முடியாது என்று வருகிரது, ஆக பிராமன குலம், சத்திரிய, வைசிய குலம் என்று ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்?

பிறப்பால்  ஒருவன் பிராமனன் ஆகிவிட முடியாது என்றால், பிராமனன் மகன் என்பதால் அவன் பிராமனன் ஆகிவிட முடியாது, சத்திரியனின் மகன் என்பதால் அவன் சத்திரியனாகிவிட முடியாது என்று தான் விளக்கம் கொள்ளவேண்டும், இதற்க்கும் மஹாபாரதத்தில் பல உதாரணங்களை முன்வைக்க முடியும், பாண்டுவின் அண்னன் திருதிராக்ஷ்ட்டிரன்  சத்திரியன் இல்லை, மூத்தவராக இருந்தும் மன்னர் பதவி மறுக்கபட்டது, இதற்கு பலரது மேலாட்டமான விளக்கம் அவர் ஊனமானவர், பார்வையற்றவர் என்பதாகும், தார்பரிய விளக்க படி அவர் மனதளவில் ஊனமானவர், சத்ரியர்களின் குணங்களில் ஒன்றான அனைவறையும் சமாக பார்க்கும் பார்வையற்றவர், சத்திரிய தகுதி மற்றும் திறமையால் அவர் மன்னர் பதவிக்கு வரவில்லை, நிற்பந்தத்தால் பதவிக்கு வந்தவர்,   ஆசையால்  பதவியில் ஒட்டி கொண்டவர், அவரே சத்திரியன் குணம் அல்லாத ஒருவன் மன்னர் பதவி (தகுதி்க்கு பொருத்தம் இல்லாத பொறுப்பை ஏற்றல்)  அடைந்தால் என்ன கதி அடைவான் என்பதறக்கு திருதிராக்ஷ்ட்டிரனே முக்கியமான உதாரணம், பந்த்ததில் கட்டுண்டவன் சத்திரியன் இல்லை, திருதிராக்ஷ்ட்டிரன் பந்த்ததில் கட்டுண்டவன் , மன அமைதியோடு அனைத்தையும் இழந்தான். அவர் மகன் துர்யோதனன் சத்ரியன், ஒரு சத்ரியனால் மற்றொரு சத்ரியனை கடடுபடுத்தவோ, வசபடுத்தவோ முடியும் இதிலும் தோற்றவர் திருதிராக்ஷ்ட்டிரன்.

Register With Us

If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.

  • Mobile: +91 9841244236
  • Email: kumar@dharmam.in
  • Register Now