கடவுள் என்கின்ற வார்த்தைக்கு விளக்கம் பல உள்ளது, இது பொருத்தமாக உள்ளதாக நான் நம்புகிறேன், கட என்றால் நகருதல், நெருங்குதல், செல்லுதல் இப்படி பல அர்த்தம் உள்ளது, உள் என்றால் உள்ளே, கடவுள் என்றால் நாம் நமக்குள்ளே சென்று ஆராய்வதாகும், தான் யார் என்று அறிந்தவன் இறைவனாகிறான், மனிதர்களில் பெரும்பான்மையினர் இந்த ஆராய்ச்சியை மறந்த பின்னால் உருவ வழிபாடு ஸ்தலங்கள் (கோவில்) தோன்றியது, தான் யார் என்று அறிந்தவனுக்கு ஆணவம் இருக்காது, கோபம் இருக்காது, பயம் இருக்காது, துக்கம் இருக்காது, பேராசை இருக்காது, எதிர்பார்ப்பு இருக்காது, போறாமை இருக்காது, அவனே கடவுள் ஆகிறான், ஆராயாத நமக்காக மகான்களும், சித்தர் பெருமக்களும் உருவ வழிபாடு ஸ்தலங்களை, நாம் நம் ஆன்மீக ஆராய்ச்சியை (தன்னை தான் உணருதல்) முழுவதுமாக விட்டுவிட கூடாது என்பதற்காக உருவாக்கியது தான். இப்பொழுது இருக்கும் சிறப்புமிக்க உருவ வழிபாடு ஸ்தலங்கள்
பின்னாளில் சில சுயநலவாதிகளாலும், தற்பெருமை பேசுபவர்களாளும், பேராசைகாரர்களாளும், வேதம் கற்காதவர்களாளும், ஆன்மிக போர்வையில் பல முடநம்பிக்கைகள் தோன்றின, அதே சுயநலவாதிகளும், தற்பெருமை பேசுபவர்களும், பேராசைகாரர்களும், வேதம் கற்காதவர்களும் தான் முதலில் இதை பின்பற்றினார்கள், பின்னர் பலர் அறியாமையால் (படிப்பறிவு இல்லாததால்) இந்த முடநம்பிக்கைகளை அதிக அளவில் பின்பற்ற துவங்கிவிட்டனர், ஆன்மீகம் என்றால் என்ன ? கேட்டு பாருங்கள், பெரும்பாலும் "ஆன்மீகம் என்றால் கோவில், பக்தி, விரதம், பூஜை, யாத்திரை, பிரசாதம், சம்பரதாயம், உற்ச்சவம், மந்திரம், பண்டிகை, தானம், புண்ணியம், இவையே பெரும்பாலாணோரின் பதிலாக இருக்கும், இவை ஆன்மீகத்தின் முதல் படிகளாகும், இங்கு இருப்பதையே நாம் பெரும் சுகமாக நினைக்கிறோம், அங்கேயே தேங்கிவிடுகிறோம்
அப்படி என்றால் ஆன்மீகம் என்பது நம்மால் எட்டமுடியாதது என்று அர்த்தமில்லை, வேதத்தில் இருக்கும் தர்ம நெறிகளை பின்பற்றினாலே ஆன்மீகத்தில் உயர் நிலை அடையலாம், தயவு கூர்ந்து நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், வேத தர்ம நெறிகளை பின்பற்றுவது என்றால் சன்யாசம் போதல் என்று அர்த்தம் அல்ல,, அல்ல,,அல்ல, தர்மபடி சரியாக வாழ்தல் என்று அர்த்தம், சாி வேதம் எங்கு போய் நாம் படிப்பது?, நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? குருவை எப்படி அறிந்து கொள்வது ? இவை அனைத்தும் சாத்தியம், இது சத்தியம். உண்மையில் ஒருவனுக்கு வேதம் கற்பதில் உத்வேகம் வந்தால் வாய்ப்பும் உடன் வரும் இது சத்தியம். மேலும் குரு வேதவியாசர் நமக்கு நான்கு வேதத்தின் மொத்த சாராம்சத்தையும் எளிய நடையில் மஹாபாரதத்தில் கதை வடிவிலும், கதாபத்திரத்தின் உரையாடல்களின் வாயிலாகவும் மனித சமுதாயத்திற்க்கு என்றைக்கும் பொருந்தும் தர்ம நெறிமுறைகளை விளக்கியுள்ளார், இதில் பத்து சதவிகிதம் புரிந்து கொண்டாளே ஆன்மீகத்தில் உயர் நிலை அடைவோம் என்பது உறுதி
மஹாபாரதம் என்பது, 1,25,000 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களை கொண்டது, பலர் மஹாபாரதத்தை வெறும் கதை போல் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை இவைகள் சத்தான பழத்தின் சாறு நீக்கபட்ட சக்கைகள் ஆகும். குரு வேத வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் ஒரு எழுத்தை கூட விட்டுவிட்டு மொழிபெயர்க்கும் உரிமை மனிதர்களாகிய நமக்கு இல்லை. ஒரு எழுத்தை கூட விட்டுவிடாமல் படிப்போம். நம்மை நாம் உணர்வோம்.
If you like the kind of work we are doing and want to be a part of it, please reach out to us.